விமானப்படைக்கு 70000 AK-103 துப்பாக்கிகள் அவரச கொள்முதல்

  • Tamil Defense
  • August 28, 2021
  • Comments Off on விமானப்படைக்கு 70000 AK-103 துப்பாக்கிகள் அவரச கொள்முதல்

விமானப்படையிடம் தற்போது உள்ள இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக அவரசமாக இரஷ்யாவிடம் இருந்து 70000 ஏகே-103 ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு தற்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தாக்கும் துப்பாக்கிகள் தேவையாக உள்ளபோதிலும் தற்போது அவரச ரீதியாக 70000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன.

காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணி மற்றும் முக்கியமான விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இந்த புதிய துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தியா மற்றும் இரஷ்யா இணைந்து ஏகே-203 துப்பாக்கிகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் பெறப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.