லடாக்கில் உலகில் மிகப்பெரிய ஏடிசி டவர் அமைக்கும் விமானப்படை

லடாக்கில் உள்ள முன்னனி விமான தரையிறங்கு தளத்தில் உலகிலேயே மிக உயர ஏர் டிராபிக் கண்ட்ரோல் டவரை இந்திய விமானப்படை அமைக்கிறது.அதே போல சீன எல்லைக்கு மிக அருகே பல இடங்களில் முன்னனி விமான தரையிறங்கு தளங்களை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தௌலத் பெக் ஓல்டி, புக்சே மற்றும் நியோமா ஆகிய பகுதிகளில் இந்த தளங்களை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பகுதியில் எதிரிகள் விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்த வீரர்களால் ஏந்தக்கூடிய இக்லா வான் பாதுகாப்பு அமைப்புகளையும் களமிறக்கியுள்ளது.

மேலும் எதிரியின் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழையாத வண்ணம் தடுக்க மிக்-29 மற்றும் ரபேல் விமானங்கள் மூலம் தொடர் ரோந்து பணிகள் நடத்தப்படுகிறது.