
இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தை சேர்ந்த நான்கு போர்க்கப்பல்களை இந்தியா தென்சீனக் கடலுக்கு அனுப்ப உள்ளது.தென் கிழக்கு ஆசியா ,தென்சீனக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இரு மாதங்களுக்கு இந்த கப்பல்கள் ரோந்து செய்யும்.இந்த இரு மாதத்தில் குவாட் நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து போர்பயிற்சி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட டெஸ்ட்ராயர் கப்பலான ரன்விஜய்,வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட பிரைகேட் கப்பலான ஷிவாலிக், நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான கட்மட் மற்றும் வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட கார்வெட் கப்பலான கோரா ஆகியவை இந்த டாஸ்ட் படைப்பிரிவில் உள்ளன.இவையனைத்தும் இந்த மாதத்தில் தனது பணியை தொடங்க உள்ளன.
இந்த நான்கு கப்பல்களிலும் வகைவகையான ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த இரு மாதத்தில் குவாட் நாடுகளுடன் போர்பயிற்சியிலும் இந்த கப்பல்கள் ஈடுபடும்.அமெரிக்க, ஜப்பான் , ஆஸ்திரேலிய கடற்படைகளுடன் மலபார் 2021 பயிற்சியிலும் ஈடுபட உள்ளது.
இது தவிர சிங்கப்பூர்,வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாடுகளின் கடற்படைகளுடனும் இணைந்து செயல்பட உள்ளது.