
மலைப் பகுதிகளில் வைத்து இயக்க வேண்டி மேலதிக 40 வஜ்ரா ஹொவிட்சர் அமைப்புகள் வாங்க இராணுவம் திட்டமிட்டுள்ளது.
லடாக்கில் வைத்து மூன்று வஜ்ரா அமைப்புகளும் சோதனை செய்யப்பட்டு வந்தன.மேலும் இந்த சோதனைகளில் வஜ்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
தற்போது இரண்டு ரெஜிமென்ட் 155mm/52 காலிபர் ஹௌவிட்சர்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவை மலைப்பகுதிகளில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் இந்திய இராணுவம் 100 அமைப்புகளை (5 ரெஜிமென்டுகள் ) சுமார் 4500 கோடிகள் செலவில் ஆர்டர் செய்து படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஆர்டர் செய்யப்பட்ட 100 துப்பாக்கிகளும் பாலைவனப்பகுதிகளில் களமிறக்க வாங்கப்பட்டன.இதை இந்தியாவின் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தயாரித்து வழங்கியது.மேலும் நூறு வஜ்ராக்களும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன.
சீனாவுடனான மோதல் போக்கு காரணமாக மேலதிக வஜ்ரா அமைப்புகள் வாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.