நான்கு வானூர்தி கேரியர்கள் வாங்க இந்தியா திட்டம்-அறிவிப்பு வெளியானது

  • Tamil Defense
  • August 26, 2021
  • Comments Off on நான்கு வானூர்தி கேரியர்கள் வாங்க இந்தியா திட்டம்-அறிவிப்பு வெளியானது

இந்திய கடற்படைக்காக நான்கு Landing Platform Docks கப்பல்கள் வாங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு கப்பல் கட்டும் தளங்கள் இந்த டென்டரை கோரலாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் முதல் கப்பல் ஒப்பந்தம் கையெழுத்தான அறுபது மாதத்திற்குள்ளும் அடுத்த ஒவ்வொரு 12 மாதத்திற்குள்ளும் 1 கப்பல் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் 900 வீரர்கள் ஏற்றிச்செல்லும் வண்ணம் இருத்தல் வேண்டும்.200மீ நீளமும் 10000நாட்டிகல் மைல் வரை செல்லக்கூடியாகவும் இருந்தல் வேண்டும்.கப்பலில் 32 Short Range Surface to Air Missile (VLSRSAM) மற்றும் 16 anti-ship missiles இருத்தல் வேண்டும்.தவிர நான்கு 4 x AK 630 CIWS மற்றும் 6 HMGs மற்றும் 8 MMGs இருத்தல் வேண்டும்.