
5375 கோடிகள் செலவில் தேஜஸ் விமானத்திற்கு என்ஜின்கள் வாங்க ஹால் நிறுவனம் GE Aviation நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சுமார் 5,375 கோடிகள் செலவில் 99 F404-GE-IN20 என்ஜின்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.இந்த என்ஜின்கள் தேஜஸ் விமானத்திற்காக வாங்கப்பட்டுள்ளன.
தேஜஸ் விமானத்திற்காக ஹால் நிறுவனம் மேற்கொண்ட மிகப் பெரிய ஆர்டராக இது உள்ளதாக ஹால் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.
விமானப்படை தற்போது 83 தேஜஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.இந்த என்ஜின்களை பெற்ற உடன் ஹால் நிறுவனம் தேஜஸ் விமானங்களை முழு வேகத்தில் தயாரிக்கும்.இதுதவிர மேலும்
தேஜஸ் மார்க் 2 விமானத்திற்காக GE F414 என்ஜின்களை இந்தியாவில் தயாரிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2029க்குள் இந்த என்ஜின்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.