புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள்; முதற்கட்ட பணிகள் தொடக்கம்

  • Tamil Defense
  • August 7, 2021
  • Comments Off on புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள்; முதற்கட்ட பணிகள் தொடக்கம்

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்கு ஏற்ற ஆழமற்ற கடல்பகுதியில் செல்லத்தக்க கப்பல்களை கட்டுவதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.

தற்போது இந்திய கடற்படையில் செயல்பாட்டில் உள்ள கமோர்த்தா ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலின் சிறிய வகையாக இந்த புதிய போர்க்கப்பல்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆழமற்ற கடற்பகுதியில் நீர்மூழ்கிகளை வேட்டையாட இந்த போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும்.மேலும் இந்த கப்பல்கள் தற்போது கடற்படையில் செயல்பாட்டில் உள்ள அபே வகை கார்வெட் கப்பல்களுக்கு மாற்றாக கடற்படையில் இணைக்கப்படும்.