அவசரம்: இரஷ்யாவிடம் இருந்து 70000 துப்பாக்கிகள் வாங்கும் இந்தியா

  • Tamil Defense
  • August 20, 2021
  • Comments Off on அவசரம்: இரஷ்யாவிடம் இருந்து 70000 துப்பாக்கிகள் வாங்கும் இந்தியா

இந்தியா மற்றும் இரஷ்யா வியாழன் அன்று ஏகே 200 ரக துப்பாக்கிகள் 70,000 வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளும் இணைந்து சுமார் ஆறு லட்சம் துப்பாக்கிகள் இந்தியாவில் தாயரிக்க முடிவெடுத்திருத்த நிலையில் தற்போது அவசரமாக 70000 துப்பாக்கிகள் இந்தியா பெறுகிறது.

இதற்கு முன்பு 20,000 7.62×39mm AK 203 துப்பாக்கிகள் நேரடியாக பெறப்பட்டு அதன் பின் 6.5 லட்சம் துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டது.ஆனால் இதற்கு தாமதம் ஆகி வரும் காரணத்தால் தற்போது 70000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன.

ஏகே-200 ரக துப்பாக்கிகளில் பல வகைகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வருட நவம்பர் மாதம் முதல் இந்த துப்பாக்கிகள் இந்தியாவிற்கு கிடைக்கும்.இந்த துப்பாக்கிகள் இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.

இதுதவிர அமெரிக்கத் தயாரிப்பு SIG716 துப்பாக்கியும் இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ளன.முன்னனி பாதுகாப்பில் உள்ள வீரர்களுக்கு SIG716 துப்பாக்கியும் மற்ற வீரர்களுக்கு ஏகே-203 துப்பாக்கியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.