
இந்திய சீன எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு லடாக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கின.
இருந்தாலும் மற்ற மோதல் போக்கு ஏற்படும் பகுதிகளில் இருந்து படைகளை விலக்க தொடர்ந்து இருநாட்டு இராணுவங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தற்போது நடைபெற்ற 12வது சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோக்ரா பகுதிகளில் இருந்து படிப்படியாக ஒருங்கிணைந்து இரு நாட்டு இராணுவங்களும் படைகளை விலக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.