ஆஃப்கன் அமெரிக்கா இந்தியாவுக்கு பேரிழப்பு !!.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்களால் இந்தியா மிகவும் இழப்பை சந்தித்து உள்ளது.

அமெரிக்கா சுமார் 65 லட்சம் கோடி ருபாய்களை செலவு செய்துள்ளது, ராணுவத்தை கட்டமைத்து தளவாடங்கள் வழங்கியது என பலவற்றை அமெரிக்கா செய்தது.

இந்தியாவும் தன் பங்குக்கு அணைகள் விளையாட்டு மைதானங்கள் மருத்துவமனைகள் பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றை கட்டியது.

அனைத்துமே இன்று தாலிபான்கள் வசம் சென்று விட்டது ஜனநாயகம் துளிர்விட்ட நாட்டில் கற்கால ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இனி மத்திய ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரும் நட்பு நாடு இல்லாமல் சென்று விட்டது, பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக நமக்கு ஏற்பட்ட இழப்பு சாதாரணமானது அல்ல.

சாபஹார் மூலமாக ஆஃப்கானிஸ்தானுக்கு பொருளாதார வழித்தடம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் தவிடு பொடியாகி விட்டது, இதற்கு ஈரானை வெறுக்கும் அமெரிக்காவின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.