ஜெர்மன் கடற்படையுடன் இந்திய கடற்படை போர்பயிற்சி

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஜெர்மன் கடற்படை போர்க்கப்பலுடன் போர்பயிற்சி செய்துள்ளது.இந்திய கடற்படையின் தல்வார் ரக பிரைகேட் கப்பலான ஐஎன்எஸ் ட்ரைகன்ட் ஜெர்மனியின் பிரைகேட் கப்பலான பயேர்ன் கப்பலுடன் ஏடன் வளைகுடா பகுதியில் போர்பயிற்சி மேற்கொண்டது.

cross deck helo landings மற்றும் Visit Board Search & Seizure (VBSS) ஆபரேசன்கள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.தல்வார் ரக கப்பலானது இந்திய கடற்படையில் உள்ள நவீன பிரைகேட் ஆகும்.இந்தியா தற்போது ஆறு தல்வார் ரக கப்பல்களை இயக்கி வருகிறது.

தற்போது மேலதிக நான்கு கப்பல்களை இரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற உள்ளது.இவற்றில் இரு கப்பல்கள் இரஷ்யாவில் தயாராகி வருகிறது.மற்றும் மேலும் இரு கப்பல்கள் இந்தியாவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.