Breaking News

நிர்பயா க்ரூஸ் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியா ?

  • Tamil Defense
  • August 11, 2021
  • Comments Off on நிர்பயா க்ரூஸ் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியா ?

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் என்ஜின் பொருத்திய நிர்பயா க்ரூஸ் ஏவுகணை பகுதிஅளவு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் தோல்விக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு என்ஜின் பொருத்தி சோதனை செய்து வெற்றிபெற்றது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கு பிறகு முழு மிசன் மோடில் சோதனை செய்யப்பட்ட பிறகு கடற்படை மற்றும் விமானப்படையிடம் உபயோகிப்பாளர் சோதனைக்காக வழங்கப்படும்.கடந்த அக்டோபரில் கடைசியாக சோதனை செய்யப்பட்ட போது ஏவப்பட்ட எட்டாவது நிமிடத்தில் சோதனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

1000கிமீ வரை செல்லக்கூடிய இந்த நிர்பயா ஏவுகணை ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து ஏவி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சோதனையின் போது என்ஜின் சிறப்பாக செயல்பட்டுள்ளது.ஆனால் டெலிவரி பிளாட்பார்ம் சரிவர இயங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.கட்டுப்படுத்தி அமைப்புகளில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் என்ஜின் சிறப்பாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0.7-0.9 மாக் வேகத்தில் செல்லக்கூடிய இந்த சப்சோனிக் ஏவுகணை மலைப்பகுதி மற்றும் கடற்பரப்பை ஒட்டியவாறு பறக்கும் திறன் கொண்டது.கடல்,தரை மற்றும் மொபைல் லாஞ்சர்கள் மூலம் இந்த ஏவுகணையை ஏவ முடியும்.