ட்ரோன்களை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் டிஆர்டிஓ; என்ன தொழில்நுட்பம் என தெரிந்து கொள்ளுங்கள்

  • Tamil Defense
  • August 27, 2021
  • Comments Off on ட்ரோன்களை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் டிஆர்டிஓ; என்ன தொழில்நுட்பம் என தெரிந்து கொள்ளுங்கள்

ட்ரோன்கள் தற்போது தேசப்பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நேரத்தில் இந்த ட்ரோன்களை கண்டறிய டிஆர்டிஓ புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருகிறது.எலக்ட்ரோ-ஆப்டிகல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ட்ரோன்களை கண்டறியும் தொழில்நுட்பத்தை தற்போது மேம்படுத்தி வருகிறது.

கடலோர மற்றும் துறைமுக பகுதிகளை கண்காணிக்க எலக்ட்ரோ ஆப்டிகல் அமைப்பை மேம்படுத்திய டேராடூனில் உள்ள Instruments Research and Development Establishment (IRDE) நிறுவனம் தான் இந்த சவாலையும் கையில் எடுத்துள்ளது.

ட்ரோன்களை கண்டறிய டிஆர்டிஓ மேற்கொண்டு வரும் திட்டங்களில் இது இரண்டாவது ஆகும்.இதற்கு முன் பெங்களூரில் உள்ள Electronics and Radar Development Establishment (LRDE) நிறுவனம் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஒன்றை மேம்படுத்தியது.இது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.