புதிய ஏவுகணைகளுடன் சீன இராணுவம் போர்பயிற்

  • Tamil Defense
  • August 23, 2021
  • Comments Off on புதிய ஏவுகணைகளுடன் சீன இராணுவம் போர்பயிற்

இரு புதிய கன்வென்சனல் குறைதூர ஏவுகணைகள் உதவியுடன் சீன இராணுவத்தின் ராக்கெட் படைப் பிரிவு போர்பயிற்சி நடத்தியுள்ளது.எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கியழிக்க இந்த ஏவுகணைகள் உபயோகிக்கப்படும் என சீனா கூறியுள்ளது.

சீனப்படையின் ராக்கெட் பிரிவு புதிய ஆயுதங்களுடன் தனது பலத்தை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது.இந்த புதிய ஏவுகணை DF-15 குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை ரகம் ஆகும்.

எதிரியின் மொத்த அமைப்பையும் இந்த ஏவுகணை தாக்கி அழிக்க கூடியது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய ஏவுகணை சண்டைக்கு ஏற்ற வண்ணம் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.