காபூல் வெடிப்பு; 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழப்பு

  • Tamil Defense
  • August 27, 2021
  • Comments Off on காபூல் வெடிப்பு; 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழப்பு

காபூலில் இரண்டு முறை தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பிறகு நடைபெற்ற ஆகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த தாக்குலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.அமெரிக்கா காரணமாகவர்களை நிச்சயம் தண்டிக்கும் என மீட்பு பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க ஜெனரல் கூறியுள்ளார்.மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடக்கலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் மீட்பு பணிகள் நிறுத்தப்படமாட்டாது என அமெரிக்கா கூறியுள்ளது.மேலும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது.இந்த தாக்குதலில் 11 அமெரிக்க மரைன் படை வீரர்களும் ஒரு கடற்படை மெடிக் வீரரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.140 ஆப்கானியர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் என்ற அச்சமும் உள்ளது.

தாக்குதலுக்கு முன்பே குண்டு வெடிப்பு தொடர்பான எச்சரிக்கை விடப்பட்ட போதும் ஆப்கனை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருந்த மக்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை.