பயங்கரவாதிகளுடனான மோதலில் இராணுவ வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • August 20, 2021
  • Comments Off on பயங்கரவாதிகளுடனான மோதலில் இராணுவ வீரர் வீரமரணம்

ராஜோரியில் பயங்கரவாதிகளின் இருப்பு நிலை குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து இந்திய இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தனமந்தி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த குழுவை ஜேசிஓ சுபேதார் ராம் சிங் வழிநடத்தினர்.தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் மீது திடீரென தாக்கிய போது சுதாரித்த நமது வீரர்கள் திருப்பி தாக்கினர்.

இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.ஆனால் இந்த சண்டையின் போது சுபேதார் ராம் சிங் படுகாயமடைந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டார் எனினும் அங்கு அவர் வீரமரணம் அடைந்தார்.

46 வயதான சுபேதார் ராம் சிங் உத்ரகன்டின் பாரி கார்வால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

வீரவணக்கம்