காபூலில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான்- தாலிபன்கள் திட்டவட்டம்

  • Tamil Defense
  • August 27, 2021
  • Comments Off on காபூலில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான்- தாலிபன்கள் திட்டவட்டம்

தங்களுடைய உடைமைகளை அழிக்க அமெரிக்க படையினர் தான் காபூலில் தாக்குதல் நடத்தினர் என காபூல் குண்டு வெடிப்பு குறித்து அமெரிக்க படையினர் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

மாலையில் எங்களால் நிறைய வெடிப்புகளை கேட்க முடிந்தது.காபூல் விமான நிலையத்திற்கு உள்ளே தங்களது உடைமைகளை அழிக்க அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் தான் இது என தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியுள்ளார்.

காபூல் நகரத்தில் ஏழு வெடிப்புகள் வரை கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.