ஆப்கனில் அமெரிக்கா விட்டு வந்த ஆயுதங்களின் மதிப்பு இவ்வளவா  !!!!!
1 min read

ஆப்கனில் அமெரிக்கா விட்டு வந்த ஆயுதங்களின் மதிப்பு இவ்வளவா !!!!!

ஆப்கனில் அமெரிக்கா விட்டு வந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.உண்மையில் அவற்றின் மதிப்பு நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

அவற்றுள் முதலாக குறிப்பிடுவதென்றால் விமானங்கள் மற்றும் வானூர்திகள்.கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவை தற்போது தாலிபன்கள் வசம் உள்ளன.அவற்றுள் பிளாக் ஹாக் வானூர்திகளும் அடக்கம்.தாலிபன்கள் பிளாக் ஹாக் விமானங்களில் பறந்த கானொளிகள் சில தினங்களுக்கு முன் வைரல் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பிறகு 75000 வாகனங்களையும் நேசப்படைகள் விட்டுச்சென்றுள்ளன.இவைகள் தற்போது தாலிபன் வசம் உள்ளதாக தெரிகிறது.சில வாகனங்களை தாலிபன்கள் இயக்கியதையும் காண முடிந்தது.

இவை தவிர ஆறு லட்சம் சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களையும் விட்டுச்சென்றுள்ளனர்.மேலும் வீரர்கள் உபயோகப்படுத்திய பயோமெட்ரிக் கருவிகளும் தாலிபன்கள் வசம் இருப்பதாக தெரிகிறது.

இவற்றின் மொத்த மதிப்பு 85பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 6,29000 கோடிகள் ஆகும்.