காபூல் தாக்குதலுக்கு காரணமான ஐஎஸ் இயக்கத்தின் மீது அமெரிக்க படை தாக்குதல்

  • Tamil Defense
  • August 28, 2021
  • Comments Off on காபூல் தாக்குதலுக்கு காரணமான ஐஎஸ் இயக்கத்தின் மீது அமெரிக்க படை தாக்குதல்

அமெரிக்க வீரர்கள் இறப்பிற்கு காரணமான காபூல் தாக்குதல் நடத்திய ஐஎஸ் இயக்கத்தின் மீது அமெரிக்கப்படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.காபூல் தாக்குதலுக்கு திட்டமிட்டவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கனின் கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காபூல் குண்டுவெடிப்பில் 13 ஆப்கன் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உங்களை தேடி அழிப்போம்.இந்த தாக்குதலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

170 பேர் வரை பலியான இந்த தாக்குதலுக்கு ஆப்கனில் உள்ள ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.