1 min read
90 நாட்களில் ஆப்கன் விழும்; அமெரிக்க உளவுத்துறை
காபூலை தாலிபன்கள் வெகு வேகமாக நெருங்கி வருகின்றனர்.இன்னும் 30 நாட்களில் காபூலை தாலிபன்கள் தனிமைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 90நாட்களில் காபூல் தாலிபன்களின் கையில் விழும் எனவும் அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
ஆப்கன்கள் படைகள் தாலிபன்களுக்கு எதிராக ஒருவேளை தீவிரமாக செயல்பட்டால் இதை மாற்ற முடியும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.தாலிபன்கள் ஆப்கனின் எட்டு மாகாணங்களின் தலைநகர்களை கைப்பற்றியதை அடுத்து இந்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ஆப்கன் படைகள் தொடர்ந்து பின்வாங்கி வரும் வேளையில் இராணுவ தளபதியை ஆப்கன் அதிபர் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.