கத்தாரும் பாகிஸ்தானும் தாலிபான்களும் !!
20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் ஆஃப்கன் மீது படையெடுத்து தாலிபான்களை வீழ்த்திய போது தாலிபான்கள் ஒடி ஒளிந்தனர்.
அப்போது முக்கிய தலைவர்களுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்தது, அங்கு தான் பேச்சுவார்த்தைகளை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தன் பங்குக்கு தாலிபான் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது, மேலும் ஆயுத பயிற்சி ஆயுதம் பணம் ஆகியவற்றை வாரி வழங்கியது.
தற்போது அமெரிக்கா படைகளை விலக்கிய நிலையில் பாகிஸ்தான் உதவியுடன் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளனர்.
பாகிஸ்தான் விமானிகள் தரைப்படை அதிகாரிகள் வீரர்கள் ஆகியோர் தாலிபான்களுடன் சேர்ந்து சண்டையிட்டது ஆகியவை மறுக்க முடியாத உண்மைகள் ஆகும்.
உலகிலேயே கேடு கெட்ட நாடாக பாகிஸ்தான் இருக்கிறது, பயங்கரவாதத்தை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ளது என்பதை தெளிவாக உணர முடியும்.