Day: August 27, 2021

மூன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்த தாலிபன் பயங்கரவாதிகள்

August 27, 2021

காபூல் விமான நிலையத்தை நோக்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்திருப்பதாக தாலிபன்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.காபூல் விமான நிலையத்தில் புதிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இவர்கள் வந்ததாக தாலிபன்கள் கூறியுள்ளனர். இதற்கு முன் காபூல் விமானநிலையத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த தாலிபன்கள் இந்த வெடிப்பிற்கு அமெரிக்க தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு முன்பே அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை தாங்கள் எச்சரித்ததாக தாலிபன்களின் செய்தி […]

Read More

ஜெர்மன் கடற்படையுடன் இந்திய கடற்படை போர்பயிற்சி

August 27, 2021

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஜெர்மன் கடற்படை போர்க்கப்பலுடன் போர்பயிற்சி செய்துள்ளது.இந்திய கடற்படையின் தல்வார் ரக பிரைகேட் கப்பலான ஐஎன்எஸ் ட்ரைகன்ட் ஜெர்மனியின் பிரைகேட் கப்பலான பயேர்ன் கப்பலுடன் ஏடன் வளைகுடா பகுதியில் போர்பயிற்சி மேற்கொண்டது. cross deck helo landings மற்றும் Visit Board Search & Seizure (VBSS) ஆபரேசன்கள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.தல்வார் ரக கப்பலானது இந்திய கடற்படையில் உள்ள நவீன பிரைகேட் ஆகும்.இந்தியா தற்போது ஆறு தல்வார் ரக கப்பல்களை இயக்கி வருகிறது. […]

Read More

இந்திய இராணுவத்திற்கு மேட் இன் இந்தியா கிரேனேடுகள்

August 27, 2021

இந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனம் கிரேனேடுகள் தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.இதனை ஒட்டி நடந்த விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் முதல் தொகுதி கிரேனேடுகளை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த Multi-Mode Hand Grenade களை நாக்பூரில் உள்ள Economic Explosive Ltd நிறுவனம் டிஆர்டிஓ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.முதல் தொகுதி ஒரு லட்சம் கிரேனேடுகள் தரச் சோதனை செய்யப்பட்டு தற்போது இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2020ல் இந்திய இராணுவத்திற்கு பத்து லட்சம் […]

Read More

காபூலில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான்- தாலிபன்கள் திட்டவட்டம்

August 27, 2021

தங்களுடைய உடைமைகளை அழிக்க அமெரிக்க படையினர் தான் காபூலில் தாக்குதல் நடத்தினர் என காபூல் குண்டு வெடிப்பு குறித்து அமெரிக்க படையினர் தாலிபன்கள் கூறியுள்ளனர். மாலையில் எங்களால் நிறைய வெடிப்புகளை கேட்க முடிந்தது.காபூல் விமான நிலையத்திற்கு உள்ளே தங்களது உடைமைகளை அழிக்க அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் தான் இது என தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியுள்ளார். காபூல் நகரத்தில் ஏழு வெடிப்புகள் வரை கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட […]

Read More

ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய ஜெய்ஸ் பயங்கரவாதிகள்;இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்

August 27, 2021

ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட ஜெய்ஸ் பயங்கரவாதிகள் மீண்டும் அந்த பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாலிபன்களின் ஆப்கன் வெற்றியை அடுத்து ஜெய்ஸ் இயக்கத் தலைவர் மசூத் அசார் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை தயார் படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவை ஜெய்ஸ் பயங்கரவாதிகள் தாக்க அனைத்து உதவிகளும் செய்ய தாலிபன்கள் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு உறுதியளிதுள்ளதாகவும் இது குறித்து இரு பயங்கரவாத […]

Read More

ஆப்கனில் அமெரிக்கா விட்டு வந்த ஆயுதங்களின் மதிப்பு இவ்வளவா !!!!!

August 27, 2021

ஆப்கனில் அமெரிக்கா விட்டு வந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.உண்மையில் அவற்றின் மதிப்பு நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவற்றுள் முதலாக குறிப்பிடுவதென்றால் விமானங்கள் மற்றும் வானூர்திகள்.கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவை தற்போது தாலிபன்கள் வசம் உள்ளன.அவற்றுள் பிளாக் ஹாக் வானூர்திகளும் அடக்கம்.தாலிபன்கள் பிளாக் ஹாக் விமானங்களில் பறந்த கானொளிகள் சில தினங்களுக்கு முன் வைரல் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு 75000 வாகனங்களையும் நேசப்படைகள் விட்டுச்சென்றுள்ளன.இவைகள் தற்போது தாலிபன் வசம் உள்ளதாக தெரிகிறது.சில வாகனங்களை […]

Read More

ட்ரோன்களை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் டிஆர்டிஓ; என்ன தொழில்நுட்பம் என தெரிந்து கொள்ளுங்கள்

August 27, 2021

ட்ரோன்கள் தற்போது தேசப்பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நேரத்தில் இந்த ட்ரோன்களை கண்டறிய டிஆர்டிஓ புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருகிறது.எலக்ட்ரோ-ஆப்டிகல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ட்ரோன்களை கண்டறியும் தொழில்நுட்பத்தை தற்போது மேம்படுத்தி வருகிறது. கடலோர மற்றும் துறைமுக பகுதிகளை கண்காணிக்க எலக்ட்ரோ ஆப்டிகல் அமைப்பை மேம்படுத்திய டேராடூனில் உள்ள Instruments Research and Development Establishment (IRDE) நிறுவனம் தான் இந்த சவாலையும் கையில் எடுத்துள்ளது. ட்ரோன்களை கண்டறிய டிஆர்டிஓ மேற்கொண்டு வரும் திட்டங்களில் இது இரண்டாவது ஆகும்.இதற்கு […]

Read More

காபூல் வெடிப்பு; 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழப்பு

August 27, 2021

காபூலில் இரண்டு முறை தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பிறகு நடைபெற்ற ஆகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இந்த தாக்குலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.அமெரிக்கா காரணமாகவர்களை நிச்சயம் தண்டிக்கும் என மீட்பு பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க ஜெனரல் கூறியுள்ளார்.மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடக்கலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் மீட்பு பணிகள் நிறுத்தப்படமாட்டாது என அமெரிக்கா கூறியுள்ளது.மேலும் இதற்கு காரணமானவர்கள் […]

Read More