Breaking News

Day: August 24, 2021

தொடங்க உள்ள மலபார் போர்பயிற்சி-குவாம் கடற்பகுதியில் நடக்கிறது

August 24, 2021

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் குவாம் கடற்பகுதியில் குவாட் நாடுகள் வரும் ஆகஸ்டு 26 முதல் 29 வரை மலபார் போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன. அமெரிக்காவின் மேற்கு கடற்பகுதியில் உள்ள தீவு தான் குவாம்.இந்த பயிற்சியில் கலந்து கொள் இந்திய கடற்படையின் ஸ்டீல்த் பிரைகேட் ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் கார்வெட் கப்பல் ஐஎன்எஸ் கட்மட் ஆகியவை குவாம் சென்றுள்ளன. மற்ற நாடுகளின் டெஸ்ட்ராயர்கள், பிரைகேட்டுகள்,கார்வெட் கப்பல்கள், நீர்மூழ்கிகள் , வானூர்திகள் […]

Read More

மாபெரும் வெற்றி; 2 முக்கிய பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

August 24, 2021

காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் இரு முக்கிய A+ category பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முக்கிய லஷ்கர் கமாண்டர் முகமது அப்பாஸ் சேக் மற்றும் அவனது உதவியாளன் சகீப் மன்சூர் தார் ஆகிய இருவரும் வீழ்த்தப்பட்டனர். காஷ்மீர் காவல்துறை வீரர்களின் இரகசிய நடவடிக்கையை தொடர்ந்து ஸ்ரீநகரில் இந்த சண்டை நடைபெற்றது.சண்டையை தொடர்ந்து இரு பயங்கரவாதிகளும் போட்டுத் தள்ளியுள்ளனர் வீரர்கள். இந்த வருடம் மட்டும் இதுவரை 100 பயஙகரவாதிகளை நமது பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளனர்.

Read More

இந்திய இராணுவத்திற்கு புதிய அதிநவீன ஆயுதங்களை வழங்க இரஷ்யா விருப்பம்

August 24, 2021

இரஷ்யாவின் Rosoboronexport JSC நிறுவனம் இந்தியாவிற்கு துப்பாக்கிகள்,இயந்திர துப்பாக்கிகள்,ஸ்னைப்பர் துப்பாக்கிகள், சப்மெசின் கன், பிஸ்டல்கள் மற்றும் கிரேனேடு லாஞ்சர்கள் உள்ளிட்ட சிறிய ரக மற்றும் இலகு ரக ஆயுதங்கள் இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்தியாவும் இரஷ்யாவும் ஏற்கனவே இணைந்து துப்பாக்கி நிறுவனம் ஏற்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன.இந்த புதிய நிறுவனம் ஏகே-203 துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும்.

Read More