Day: August 15, 2021

சரணடைந்ததா ஆப்கன் ?

August 15, 2021

தாலிபன்கள் தற்போது காபூலில் அனைத்து பகுதிகளிலும் இருந்து நுழைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் ஆப்கன் தலைவர் கானி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை அமெரிக்க விமானப்படை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்கன் பீல்டு கோர் வீரர்கள் அனைவரும் சரணடைந்துள்ளனர். தாலிபன்கள் சிறையில் உள்ள அனைத்து சக தாலிபன்களையும் விடுவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அமைதியான முறையில் காபூலை கைப்பற்ற உள்ளதாகவும் தாலிபன்கள் கூறியுள்ளனர். ஆப்கன் இனி தாலிபன்கள் வசம்..

Read More

மூன்று கோப்ரா கமாண்டோ வீரர்களுக்கு சௌரிய சக்ரா விரு

August 15, 2021

மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்பு பிரிவான கோப்ரா கமாண்டோ படைப் பிரிவை சேர்ந்த மூன்று வீரர்களுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.சத்திஸ்கரன் சுக்மா மாவட்டத்தில் நான்கு மிக முக்கிய நக்சல்களை வீழ்த்தியமைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருது தான் சௌரிய சக்ரா ஆகும்.201வது கோப்ரா பட்டாலியனைச் சேர்ந்த டெபுடி கமாண்டன்ட் சிதேஷ் குமார், சப் இன்ஸ்பெக்டர் மன்ஜிந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் சுனில் சௌதாரி ஆகிய வீரர்களுக்கு […]

Read More