வான் போக்குவரத்து தடைபடும் முன்னரே இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப இந்தியா ஆப்கனில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆப்கனில் பல மாகாணங்களில் தொடர்ந்து சண்டை அதிகரித்து வருவதை அடுத்து அங்கு வான் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. மொத்தமாக போக்குவரத்து தடைபடும் முன்னால் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Read More72 மணி நேர அதிவேக தாக்குதலுக்கு பிறகு தாலிபன்கள் ஆப்கனின் ஐந்து மாகாண தலைநகர்களை கைப்பற்றியதை அடுத்து தற்போது ஆப்கன் படைகள் தாலிபன்களுக்கு எதிராக தெற்கு ஆப்கனில் போரிட்டு வருகின்றன. கந்தகார் மற்றும் ஹெல்மன்ட் மாகாண பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தாலிபன்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.ஆப்கன் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் , தாலிபன்கள் கடுமையான சேதத்திற்கு உட்பட்டுள்ளனர் எனவும் ஆப்கனில் பாதுகாப்பு நிலை […]
Read Moreஇந்தியாவின் கிழக்கில் செயல்படுவோம் என்ற திட்டத்தின் பகுதியாக இந்திய கடற்படையின் சிவாலிக் மற்றும் கட்மட் போர்க்கப்பல்கள் ராயல் புருனே கடற்படையுடன் இணந்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு கப்பல்களும் ஆகஸ்டு 9 அன்று புருனே சென்றடைந்தன.மேலும் ஆகஸ்டு 12 வரை கப்பல்கள் அங்கு இருக்கும்.கொரானா பாதிப்பை கருத்தில் கொண்டு தொடர்புகள் இல்லாமலேயே பயிற்சிகள் நடைபெறும். பயிற்சிக்கு சென்றுள்ள இரு கப்பல்களுமே அதிநவீன போர்க்கப்பல்கள் ஆகும்.
Read More