Day: August 9, 2021

லடாக்கில் களமிறக்கப்பட்டுள்ள கருட் கமாண்டோ படைப் பிரிவு

August 9, 2021

இந்திய விமானப்படையின் சிறப்பு படைப்பிரிவினர் தான் இந்த கருட் கமாண்டோ வீரர்கள்.இவர்களின் பிரதான பணி போர்விமான தளங்கள் பாதுகாப்பு மற்றும் வான் வழியாக அதிரடி ஆபரேசன்கள் நடத்துவதும், இரகசிய அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஆகும். இதுதவிர காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடுவதும் ஆகும்.தற்போது இந்திய சீன எல்லை மோதல் நடைபெற்று வருவதை அடுத்து லடாக்கில் களமிறக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக்கின் ந்யோமா Advanced Landing Ground (ALG)-ல் நடைபெற்ற பயிற்சியின் போது கருட் கமாண்டோ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். […]

Read More

சிறப்பாக செயல்பட்ட K9 வஜ்ரா;மேலும் அதிக வஜ்ரா வாங்க திட்டம்

August 9, 2021

மலைப் பகுதிகளில் வைத்து இயக்க வேண்டி மேலதிக 40 வஜ்ரா ஹொவிட்சர் அமைப்புகள் வாங்க இராணுவம் திட்டமிட்டுள்ளது. லடாக்கில் வைத்து மூன்று வஜ்ரா அமைப்புகளும் சோதனை செய்யப்பட்டு வந்தன.மேலும் இந்த சோதனைகளில் வஜ்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது இரண்டு ரெஜிமென்ட் 155mm/52 காலிபர் ஹௌவிட்சர்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவை மலைப்பகுதிகளில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இந்திய இராணுவம் 100 அமைப்புகளை (5 ரெஜிமென்டுகள் ) சுமார் 4500 கோடிகள் […]

Read More

எல்லையில் இந்திய சீனப்படைகள் பின்வாங்கல்

August 9, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு லடாக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்கின. இருந்தாலும் மற்ற மோதல் போக்கு ஏற்படும் பகுதிகளில் இருந்து படைகளை விலக்க தொடர்ந்து இருநாட்டு இராணுவங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தற்போது நடைபெற்ற 12வது சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் பின்வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோக்ரா பகுதிகளில் இருந்து […]

Read More