உலகின் மிகச்சிறந்த ஸ்டெல்த் போர் விமானங்கள் தகவல் வெளியானது !!

  • Tamil Defense
  • July 18, 2021
  • Comments Off on உலகின் மிகச்சிறந்த ஸ்டெல்த் போர் விமானங்கள் தகவல் வெளியானது !!

உலகின் மிகச்சிறந்த ஸ்டெல்த் போர் விமானங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது இதில் அமெரிக்க ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் இடம்பெற்று உள்ளன.

அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய ஸ்டெல்த் போர் விமானங்கள் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.

இதனையடுத்து ரஷ்ய தயாரிப்பான சுகோய்-57 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, இது சுகோய் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக சீனாவின் செங்டு ஜே-21 நான்காம் இடத்தில் உள்ளது இதனை சீனாவை சேர்ந்த செங்டு விமான தொழிற்சாலை குழுமம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட அனைத்து விமானங்களுமே அந்தந்த நாடுகள் மற்றும் வேறு சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிட தகுந்த விஷயம் ஆகும்.

இதனை தவிர ரஃபேல், டைஃபூன், சுகோய்-30 மற்றும் 35, மிராஜ்-2000 போன்ற விமானங்கள் 4+++ தலைமுறைக்கு தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன ஆனால் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.