
ஆஸ்திரேலியா அருகே அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தலைமையில் டாலிஸ்மேன் சேபர் என்ற பெயரில் மிக பிரமாண்டமான கடற்படை பயிற்சி துவங்கியுள்ளது.
இதில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் நேரடியாகவும் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடற்படைகள் பார்வையாளர்களாகவும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் சீன கடற்படையை சேர்ந்த கண்காணிப்பு கப்பல் ஒன்று இந்த பயிற்சிகளை கண்காணிக்க ஆஸ்திரேலிய கடல்பகுதிக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.