இரவில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிய அமெரிக்க படைகள் அதிருப்தியில் ஆஃப்கன் அரசு !!

  • Tamil Defense
  • July 7, 2021
  • Comments Off on இரவில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிய அமெரிக்க படைகள் அதிருப்தியில் ஆஃப்கன் அரசு !!

சமீபத்தில் அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை ஆஃப்கன் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட உள்ளதாக அறிவித்தது.

அதன்படி ஏற்கனவே பல வீரர்கள் கிளம்பிய நிலையில் மீதம் இருந்த வீரர்கள் முறைப்படி தளத்தை ஆஃப்கன் ராணுவத்திடம் ஒப்படைக்கவில்லை

மாறாக இரவோடு இரவாக தளத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆஃப்கன் ராணுவத்திற்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக அமெரிக்க படைகள் வெளியேறின.

இதை அறிந்து கொண்ட தாலிபான் ஆதரவாளர்கள் தளத்தின் உள்ளே புகுந்து கவச வாகனங்கள் மற்றும் பல கருவிகளை திருடி சென்றுள்ளனர்.

தகவலறிந்து வந்த ஆஃப்கன் ராணுவத்தினர் தாலிபான்களை விரட்டி விட்டு தளத்தை தங்களது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளனர்.