
ஆஃப்கானிஸ்தான் நாட்டிலேயே மிகப்பெரிய ராணுவ தளமாக பக்ரம் விமானப்படை தளம் செயல்பட்டு வந்தது இது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினரின் முக்கிய கேந்திரமாக விளங்கியது.
இந்த படைதளத்தில் இருந்து அமெரிக்க தரைப்படை விமானப்படை கடற்படை மரைன் கோர் மற்றும் பன்னாட்டு வான்படை அணிகள் தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத ஒழிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது அமெரிக்க அரசு முழு படைவிலக்கல் நடவடிக்கையை அறிவித்துள்ள நிலையில் பக்ரம் படைதளத்தில் இருந்து ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளன.
இங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்க விமானப்படையின் 455ஆவது படையணி தற்போது வெளியேறிவிட்டு தளத்தை ஆஃப்கன் படைகள் வசம் ஒப்படைத்துள்ளது.
தற்போது அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் வரை ஜெனரல் ஆஸ்டின் மில்லர் அமெரிக்க படைகளை வழிநடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.