
பாகிஸ்தானுக்கு இரகசிய தகவல்களை அனுப்பிய இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அனுப்பிய தகவல்கள் அனைத்தும் இரகசியமானவை என இராணுவமும் உறுதிபடுத்தியுள்ளது.
பொக்ரான் இராணுவ தளத்திற்கு அருகே இருந்த 34வயது காய்கறி விற்பருக்கு இந்த தகவலை இராணுவ வீரர்கள் வழங்கியுள்ளார்.காய்கறி விற்பவன் பாக் உளவு அமைப்பிற்கு இந்த தகவலை அனுப்பிவைத்தது கண்டறியப்பட்டுள்ளது.
நம்முடைய உளவு அமைப்புகள் மூலம் இந்த தகவல் டெல்லி கிரைம் பிரிவிற்கு கிடைத்த பிறகு இந்த ஆக்சன் எடுக்கப்பட்டுள்ளது.காய்கரி விற்பவனிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
காய்கறி கடை காரனை கைது செய்த பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பரம்ஜித் என்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளான்.தற்போது இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.