
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகளை உபி காவல் துறை கைது செய்துள்ளது.இதனையடுத்து பீகாரிலும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உபி காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு லக்னோவில் அல்கொய்தா வலையமைப்பை கண்டறிந்து இரு பயங்கரவாதிகளை கைது செய்தது.
மின்ஹாஸ் அகமது மற்றும் மசிரூதீன் என இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் லக்னோ மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.