சர்வாதிகார சீனாவையே அச்சப்பட வைக்கும் பயங்கரவாத இயக்கம் !!

  • Tamil Defense
  • July 9, 2021
  • Comments Off on சர்வாதிகார சீனாவையே அச்சப்பட வைக்கும் பயங்கரவாத இயக்கம் !!

சீனா எனும் சர்வாதிகார பொருளாதார வலிமை மிகுந்த நாட்டையே அச்சப்பட வைக்கும் பயங்கரவாத இயக்கம் ஒன்று உள்ளது.

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இனக்குழுவை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான கிழக்கு தர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் எனும் பயங்கரவாத இயக்கம் சீன அரசுக்கு எதிராக இயங்கி வருகிறது.

தற்போது அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதையடுத்து சீனா இந்த இயக்கத்தின் எழுச்சி குறித்து கவலை கொள்கிறது.

காரணம் தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட இயக்கம் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெற்றிகரமாக இயங்கி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட கூடும்.

ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் இணைந்து இயங்கி வருவதோடு மட்டுமின்றி சிரியாவிலும் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி போர் அனுபவமும் மிக்க இந்த இயக்கத்தின் தெஹ்ரீக் இ தாலிபான மற்றும் லஷ்கர் இ இஸ்லாம் ஆகிய பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடனும் தொடர்பில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இயக்கம் சீனாவின் CPEC மற்றும் Silk Road அல்லது OBOR திட்டங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்துள்ள சீனா வரப்போகும் ஆபத்தை சந்திக்க எதிர்நோக்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.