
இரஷ்யா தற்போது நான்காம் தலைமுறை கட்டி வரும் வேளையில் ஐந்தாம் தலைமுறை நீர்மூழ்கிகளுக்கான வடிவமைப்பை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த புதிய நீர்மூழ்கிகள் குறித்து மிக குறைவான தகவலே வெளியாகியுள்ளது.
இதன் எடை 12-13 ஆயிரம் டன்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இதை 90 மாலுமிகள் இயக்குவர்.இவை தற்போதுள்ள Yasen-M-class SSGN-ஐ விட சிறிதாக இருக்கும்.நன்றாக maneuverability செய்யும் வகையிலும் அதிக ஸ்டீல்த் அம்சங்களுடனும் இந்த கப்பல் கட்டப்பட உள்ளது.
இரு வகைகளில் இந்த நீர்மூழ்கி கட்டப்பட உள்ளது.ஒன்று நீர்மூழ்கி எதிர்ப்பு வகை.இது அமெரிக்காவின் US Columbia வகை மற்றும் பிரிட்டனின் Vanguard வகை நீர்மூழ்கிகளை எதிர்த்து சண்டையிடும் வண்ணம் அமைக்கப்படும்.
இரண்டாவது வகைTsirkon ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏந்தி செல்லும் வகையில் அமைக்கப்படும்.இது கடற்பரப்பில் வரும் பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கும் வண்ணம் கட்டப்படும்.1000கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை மணிக்கு 7000கிமீ என்ற வேகத்தில் சென்று தாக்கியழிக்க Tsirkon ஏவுகணைகளால் முடியும்.
மற்ற நான்காம் தலைமுறை நீர்மூழ்கிகளை விட இந்த நீர்மூழ்கி குறைந்த அளவிலான சப்தத்தை மட்டுமே எழுப்பும்.