
ஹரியானாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.கடந்த 2018 முதல் இராணுவம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானிக்கு அனுப்பியதாக காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா்.
தற்போது அவரது கைபேசி கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் லேப்-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பல்வான் ஏரியா எஸ்பி தீபக் கலாவத் அவர்கள் கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு முகநூல் வழியாக ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார்.அவர் மூலமாக தகவல்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
முன்னதாக பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக இராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.