
ஜம்முவில் உள்ள விமான தளத்தில் சில தினங்களுக்கு முன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.மிகவும் ஆபத்தான தாக்குதலாக பார்க்கப்படும் இந்த புதிய விதமான தாக்குதலை பயங்கரவாதிகள் தற்போது கையிலெடுத்துள்ளனர்.
மிகவும் குறைந்த செலவில் பெரிய அளவில் சேதம் விளைவிக்க இது போன்ற தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.தற்போது இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க தொழில்நுட்பங்களை இந்தியா அப்கிரேடு செய்ய வேண்டியதாக உள்ளது.
தற்போது தளத்தில் பிளாக் பேந்தர் கமாண்ட் வாகனம் இது போன்ற தாக்குதல்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அனத்து காலநிலைகளுக்கும் ஏற்ற புல்லட் புரூப் ட்ரோன் எதிர்ப்பு வாகனமும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது நடந்து முடிந்த தாக்குதலில் பாக்கின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஐஎஸ்ஐ பேச்சுக்களை இடைமறித்து கேட்டதில் இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.