தாலிபான்களுக்கு உதவும் பாக் விமானப்படை ஆஃப்கன் துணை அதிபர் குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • July 18, 2021
  • Comments Off on தாலிபான்களுக்கு உதவும் பாக் விமானப்படை ஆஃப்கன் துணை அதிபர் குற்றச்சாட்டு !!

ஆஃப்கன் படைகள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள சில டவுன்களை கைப்பற்றி உள்ள தாலிபான்களை விரட்டியடிக்க முயற்சித்து வருகின்றன.

இதனிடையே ஸ்பின் போல்டக் பகுதியில் உள்ள தாலிபான்களை விரட்டியடிக்க தடை ஏற்படுத்தும் பொருட்டு பாக் தரப்பு செயல்படுவதாகவும்,

அந்த பகுதியை நெருங்கினால் ஆஃப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்துப்படும் என பாகிஸ்தான் விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் ஆஃப்கன் துணை அதிபர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பாகிஸ்தான் தரப்பு ஆஃப்கன் துணை அதிபர் அம்ருல்லா சாலேஹ்வின் குற்றசாட்டை அடியோடு மறுத்துள்ளது.