காஷ்மீரில் 1971 போர் நினைவு ஜோதிக்கு அமோக வரவேற்பு நெகிழ்ந்து போன ராணுவம் !!

  • Tamil Defense
  • July 18, 2021
  • Comments Off on காஷ்மீரில் 1971 போர் நினைவு ஜோதிக்கு அமோக வரவேற்பு நெகிழ்ந்து போன ராணுவம் !!

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று உலக வரைபடத்தையே மாற்றி அமைத்தது.

இதனையடுத்து இந்த வருடம் 50ஆவது ஆண்டு என்பதையடுத்து ராணுவம் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக போரின் நினைவு ஜோதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஷ்மீர் சென்றடைந்த ஜோதியை 15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பான்டே தலைமையில் போரில் பங்கு பெற்ற முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், NCC மாணவர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில் போர் நினைவு ஜோதிக்கு அம்மாநில மக்கள் கரகோஷங்கள் எழுப்பி அளித்த வரவேற்பு ராணுவத்தினரை நெகிழ வைத்துள்ளது.

இத்தகைய ஒரு வரவேற்பை நாங்கள் முற்றிலும் எதிர் பார்க்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.