இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு போட்டியாக பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து LY80 எனும் குறுந்தூர மற்றும் இடைத்தூர வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கி படையில் இணைத்தது.
மேலும் இத்தகைய ஆறு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட அமைப்பின் ஏவுகணைகள் வேலை செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சீன பொறியாளர்கள் பாகிஸ்தானில் தங்கி இருந்து தரமற்ற தங்களது தளவாடத்தை சீர் செய்ய அயராது உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ இந்தியாவுடன் போட்டி போட்டே தீருவேன் என்று பாகிஸ்தான் வசமாக சீன வலையில் சிக்கி திருடனுக்கு தேள் கொட்டியது போல அவதிப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.