இந்தியா சீனாவுக்கு இடையே கடந்த ஒரு வருடமாக எல்லைத் தகறாரு நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போட்டி இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.
சீனா 1964ம் ஆண்டில் அணுஆயுத திறன் பெற்றது.இந்தியா மறுபக்கம் 1998ம் ஆண்டு தான் பெற்றது.சீனாவின் அணு மற்றும் அதுசார்ந்த ஆயுத ஆராய்ச்சிம் மிகப் பெரியவை என அமைச்சர் கூறியுள்ளார்.
எல்லைத் தொடர்பு தொடர்பாக இருநாட்டு உறவுகளில் பிரச்சனை இருப்பது உண்மை தான் எனினும் அது அணுஆயுத போட்டியாகவில்லை.கடந்த நாற்பது வருடங்களாக சீனாவுடனான உறவு சுமூகமாக செல்வதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது வரை எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.