இந்திய தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நைஜீரியா !!
1 min read

இந்திய தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நைஜீரியா !!

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த LCH எனப்படும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை நைஜீரியா வாங்க விரும்புகிறது.

இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நைஜீரிய தரைப்படையின் வான்பிரிவுடைய பிரதான தாக்குதல் ஹெலிகாப்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 8 முதல் 15 ஹெலிகாப்டர்களை நைஜீரிய தரைப்படை வாங்கலாம் எனவும் இவற்றை 2 வருட காலகட்டத்திற்குள் இந்தியா டெலிவரி செய்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 5 நைஜீரிய விமானிகள் இந்தியாவுக்கு வந்து இந்த வகை ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.