தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு புதிய துணை தளபதிகள் !!

  • Tamil Defense
  • July 3, 2021
  • Comments Off on தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு புதிய துணை தளபதிகள் !!

இந்திய விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி நேற்று பொறுப்பேற்று கொண்டார், அடுத்த வருடத்துடன் நாட்டு பணியில் 40 வருடத்தை நிறைவு செய்ய உள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி மாணவரான இவர் 1982 ஆம் ஆண்டு பணியில் இணைந்தார் பல்வேறு வகையான போர் விமானங்களில் சுமார் 3800 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர் மேலும் ஆபரேஷன் மேக்தூத் மற்றும் ஆபரேஷன் சேஃப்டு சாகர் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

இதே போல இந்திய தரைப்படையின் துணை தளபதிகளில் ஒருவராக லெஃப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் குமார் ஷர்மா நேற்று பொறுப்பேற்று கொண்டார், இதற்கு முன் இப்பொறுப்பை வகித்த லெஃப்டினன்ட் ஜெனரல் பரம்ஜீத் சிங் சங்கா ஒய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய தரைப்படையின் வான் பாதுகாப்பு கோர் பிரிவின் தலைவராக இருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் ஏ.பி.சிங் ஒய்வு பெற்றதையடுத்து அப்பதவியை லெஃப்டினன்ட் ஜெனரல் சுனில் பூரி கோஸ்வாமி ஏற்று கொண்டுள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் தற்போது இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகிக்கும் ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்கள் ஒய்வு பெற உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.