புதிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு பிரதமர் உட்பட அமைச்சர்களுக்கு விளக்கிய DRDO தலைவர் !!

  • Tamil Defense
  • July 1, 2021
  • Comments Off on புதிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு பிரதமர் உட்பட அமைச்சர்களுக்கு விளக்கிய DRDO தலைவர் !!

சமீபத்தில் ஜம்மு விமான தளத்தில் ட்ரோன் மூலமாக நடைபெற்ற தாக்குதல் பலத்த அதிரச்சியை பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அரசுக்கு சற்றே மோசமான நிலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பிரதமர் பாதுகாப்பு அமைச்சர் உள்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு இதுகுறித்து சந்தித்து பேசியது அப்போது கூட்டுபடை தலைமை தளபதி மற்றும் DRDO தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

DRDO தலைவர் சதீஷ் ரெட்டி அப்போது தனது அமைப்பு ஒரு ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கருவியை உருவாக்கி உள்ளதாகவும் இது சிறப்பான பாதுகாப்பை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த அமைப்பில் HARD KILL மற்றும் SOFT KILL ஆகிய இரு வசதிகள் உள்ளன அதாவது ஜாம்மிங் மற்றும் தாக்கி அழித்தல் ஆகிய இரு பணிகளையும் இதனால் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

இந்த ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை பரிசோதித்து படையில் இணைக்கும் முக்கிய பணி இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.