
இந்திய விமானப்படைக்காக பாரத் டைனமிக் நிறுவனத்திடம் இருந்து சுமார் 499 கோடிகள் செலவில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் வாங்கப்பட உள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் ஏர் கமோடோர் அஜஸ் சிங்கால் அவர்கள் கையொப்பம் இட்டார்.
தற்போது பாரத் டைனமிக் நிறுவனம் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்கி வருகிறது.பாரத் டைனமிக் நிறுவனம் தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முயற்சி செய்து வருகிறது.மேலும் சில நாடுகள் இந்த அமைப்பை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனம் இது தவிர டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், வான்-வான் ஏவுகணைகள் , வான்-தரை ஏவுகணைகள் மற்றும் மேலும் பல தளவாடங்களை தயாரித்து வருகிறது.