மனிதனால் ஏவப்படக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை
1 min read

மனிதனால் ஏவப்படக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

கடந்த புதன் அன்று இந்தியாவின் டிஆர்டிஓ குறைந்த எடையுடைய fire and forget மனிதனால் ஏவப்படக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது.

இந்த ஏவுகணையில் சிறிய இன்பிராரெட் இமேஜிங் சீக்கர் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ் உள்ளன.ஏவிய பிறகு இந்த ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்துள்ளது.

இந்த சோதனை குறைந்த தூரத்திற்கு சோதனை செய்யப்பட்டது.சோதனை தொடர்பான அனைத்து குறிக்கோள்கையும் இந்த ஏவுகணை சரியாக நிறைவேற்றியுள்ளது.மேலும் இந்த ஏவுகணை ஏற்கனவே அதிகபட்ச தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஏவகணை மேம்பாடு முடியும் தருணத்தில உள்ளது.