ராணுவ சீர்த்தருத்தங்களின் ஒரு பகுதியாக இந்திய கூட்டுபடை தலைமை தளபதியின் அதிகாரங்களை அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது கூட்டுபடை தலைமை தளபதி என்பவர் அரசுக்கு ஒற்றை இலக்க பாதுகாப்பு ஆலோசகராகவும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும்,
முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பை அதிகபடுத்தி புதிய சீர்த்தருத்தங்களை அறிமுகபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதும் அவரது பணியாக இருக்கிறது.
ஆனால் இந்த நவீன காலகட்டத்தில் இதற்கும் அதிகமான அதிகாரங்களை அவருக்கு வழங்க வேண்டும் என கூறப்படுகிறது அதாவது 9 அமைப்புகளின் கட்டுபாடு அவரிடம் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
உதவி அமைப்புக்கள்:
1) ஒருங்கிணைந்த பாதுகாப்பு பட்ஜெட் பிரிவு
2) ஒருங்கிணைந்த மருத்துவ பிரிவு
3) ஒருங்கிணைந்த கேண்டீன் அங்காடிகள் பிரிவு
4) ஒருங்கிணைந்த சப்ளை பிரிவு
ஆபரேஷனல் அமைப்புக்கள்:
1) ஒருங்கிணைந்த சிறப்பு படைகள் பிரிவு
2) அணு ஆயுத பிரிவு
3) விண்வெளி ராணுவ பிரிவு
4) ராணுவ சைபர் ஏஜென்சி
5) ராணுவ உளவு ஏஜென்சி.
ஆகியவற்றில் அணு ஆயுத பிரிவின் தாக்குதல் அதிகாரங்கள் மட்டும் நாட்டின் அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டும் ஆனால் உத்தரவுகள் கூட்டுபடை தலைமை தளபதி வாயிலாக பிறப்பிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் கூட்டுபடை தலைமை தளபதியின் அதிகார வரம்புகள் அவருடைய பணிக்கான நோக்கத்தை பிரதிபலிக்காத வகையில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.