
சமீபத்தில் ஹைத்தி நாட்டின் அதிபராக இருந்த ஜோவினெல் மெஸ்ஸி அவரது வீட்டிற்கு அருகே வைத்து மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதனையடுத்து ஹைத்தி பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறை ஆகியவை குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 8 பேரை ஹைத்தி பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒய்வு பெற்ற கொலம்பிய ராணுவ வீரர்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து ஹைத்தி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.