பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் எம்.டெக் (M Tech Defence Technology) என்ற படிப்பை ஆரம்பித்து உள்ளன.
இந்த M.Tech Defence Technology படிப்பில் ஆறு பிரிவுகள் இருக்கும் அவையாவன Combat Technology, Aero Technology, Naval Technology, Communication systems & Sensors, Directed energy Technology மற்றும் High Energy materials Technology.
இந்த படிப்பை IIT, NIT, AICTE அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழங்கள்/ கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைகழங்களில் மாணவர்கள் பயில முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சி பாதுகாப்பு துறையில் விஞ்ஞானி ஆக துடிக்கும் மாணவர்களுக்கும் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துதல் ஆக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.