முக்கிய லஷ்கர் கமாண்டரை போட்டுத் தள்ளிய நமது வீரர்கள்

திங்கள் காலை சோபியானில் நடைபெற்ற என்கௌன்டரில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் கமாண்டர் ஒருவனை பாதுகாப்பு படைவீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

2017முதல் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அவனின் பெயர் இஸ்பக் தார் என்பதாகும்.இஸ்பக் தார்-ஐ தவிர்த்து மேலும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.

செக் சாதிக் கான் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான உளவுத் தகவல்களை அடுத்து அங்கு என்கௌன்டர் தொடங்கப்பட்டது.

இதற்கு பிறகான என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.