
ஜப்பான் நாட்டின் துணை பிரதமரான டாரோ அஸோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சீனா தைவானை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் ஜப்பான் உடனடியாக போரில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது தைவான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஜப்பான் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்றார் அவர்.
இவரின் பேச்சு சாதாரணமாக கடந்த செல்லக்கூடிய ஒன்று அல்ல காரணம் இவர் அந்நாட்டின் நிதியமைச்சராகவும், 4 பேர் மட்டுமே அங்கம் வகிக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் தைவான் விவகாரம் நாளுக்கு நாள் சுடுபிடிப்பதாகவும் அதற்கு உதாரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேசியதை சுட்டி காட்டினார்.
அதாவது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில் தைவான் ஒருங்கிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாயந்த அசைக்க முடியாத இலக்குகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.